16ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர் ஏகநாதர், இளம் பிராயத்திலேயே குருவருளால் இவருக்குத் திருக்காட்சி தரும் தத்தாத்ரேயர் 'ஏகநாதா! வால்மீகி இராமாயணத்தையும், வியாச பாகவதத்தையும் மராட்டிய மொழியில் இயற்றி நிலைத்த புகழைப் பெறுவாய்' என்று இவரின் அவதார நோக்கத்தினை உணர்த்தி அருள் புரிகின்றார். அதன் வழி நின்று இவ்விரு காவியங்களையும் மகாராஷ்ட்ர மொழியில் இயற்றிப் பண்டரிபுர ஆலயத்தில் யாவரும் வியக்கும் வகையில் அரங்கேற்றம் புரிகின்றார்.
இவருடைய பாடல்களால் பெரிதும் திருவுள்ளம் மகிழும் பண்டரிநாதர் அதனை அருகிலிருந்து எந்நேரமும் கேட்டு அனுபவிக்க, 'கண்டியா கிருஷ்ணன்' எனும் சிறுவனின் வடிவில் ஏகநாதரிடம் வலிய சென்று ஊதியமின்றிப் பணிபுரிவதாகக் கூறி அவருடனேயே தங்கி வருகின்றார். அனுதினமும் ஏகநாதரின் பூஜைக்குத் திருமஞ்சன நீர் கொண்டு வருவார்; பூப்பறித்து வைப்பார்; வாயிலை மெழுகிக் கோலமிடுவார்; ஏகநாதரின் மனைவியார் தயாரிக்கும் பிரசாத உணவிற்கு அடுப்படியில் உதவிகள் பல புரிவார்; உபன்யாச சமயங்களில் ஏகநாதரின் அற்புத அற்புதமான பாடல்களைக் கேட்டு ரசித்தவாறே விசிறி வீசுவார். இவ்விதமாய்ப் பாண்டுரங்கன் சேவை செய்தது ஓரிரு மாதங்களோ வருடங்களோ அல்ல, முழுதாக 12 வருடங்கள்.
பண்டரிநாதர் விக்கிரகத் திருமேனியை விட்டு நீங்கியிருந்ததால் ஆலயத்தில் உற்சவங்கள் சிறப்புடன் நடைபெறுவதில்லை, இதன் காரணம் புரியாது மிக வருந்திப் பலகாலம் தவமிருந்த அடியவரொருவரின் முன்பு ருக்மிணிப் பிராட்டியார் தோன்றி 'பக்தனே! எம்பெருமான் ஏகநாதரின் திருப்பாடல்களில் மயங்கி அவருடைய இல்லத்திலேயே எழுந்தருளி இருக்கின்றார், நீ சென்று என் நாயகர் மீண்டும் ஆலயத்தில் கோயில் கொள்வதற்கான முயற்சியினை மேற்கொள்வாய்' என்றருள் புரிகின்றார். அந்த அடியவர் மூலம் விவரமறியும் ஏகநாதர் பாண்டுரங்கனின் கருணையையும், அடியவர்க்கு எளியவராயுள்ள தன்மையினையும் எண்ணி எண்ணிக் கண்ணீர் பெருக்கிக் கதறுகின்றார் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!.

No comments:
Post a Comment