துக்காராம் சுவாமிகளின் மீது அதீத மதிப்பும் ஈடுபாடும் கொண்டிருந்தார் வீர சிவாஜி, தெய்வீக இசையோடு கூடிய சுவாமிகளின் பாடல்களைக் கேட்கும் பெருவிருப்பத்தால், ஒரு எளிய வைஷ்ணவ பக்தனாக வேடம் தரித்து, நெற்றியில் கோபிகா சந்தனமிட்டுக் கைகளில் தம்பூரா மற்றும் சிப்ளா கட்டையுடன் பண்டரிபுரம் புறப்பட்டுச் செல்கின்றார். ஆலயத்தில் எண்ணிறந்த அடியவர்களோடு அமர்ந்தவாறு சுவாமிகளின் பாடல்களைத் தாளமிட்டவாறே மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கின்றார்.
சிவாஜி ஆலயத்திலிருப்பதை ஒற்றர்கள் மூலம் அறியும் ஔரங்கசீப், சிவாஜியை வீழ்த்த இதுவே தக்கதொரு சமயமென்றுக் கருதிப் பெரும் குதிரைப் படையொன்றினைப் புதுதில்லியிலிருந்துப் பண்டரிபுரத்திற்கு அனுப்புகின்றான். அன்று ஏகாதசி தினம், ஆலயத்தில் விடிய விடிய துக்காராம் சுவாமிகள் பாண்டுரங்கனையும், அடியவர்களையும் தனது இன்னிசை மழையில் நனைத்துக் கொண்டிருக்கின்றார். முகலாயப் படையினர் நள்ளிரவு நேரத்தில் அப்பகுதி முழுவதிலும் சூழ்ந்து ஆலயத்தையும் முழுவதுமாய் முற்றுகையிட்டு விடுகின்றனர். ஆலயத்திலோ இவையெதையுமே உணராமல் அனைவரும் பாண்டுரங்க ஸ்மரனையிலேயே மெய்மறந்து லயித்திருக்கின்றனர்.

பாண்டுரங்கப் பெருமான் அடியார்க்கு அடியவரான சிவாஜியைக் காத்து அருள் புரியத் திருவுள்ளம் கொள்கின்றார், சிவாஜியின் உருவில், ஆலய வளாகத்தின் வெளி வாசலுக்கு அருகில், முகலாயப் படையினரின் முன்னே, குதிரையொன்றில் எழுந்தருளித் தோன்றுகின்றார். கடுங்கோபத்துடன் ஔரங்கசீப்பின் படையினர் சிவாஜி உருவிலிருந்த பாற்கடல் வாசனைத் துரத்திச் செல்கின்றனர். காடு, மேடு, மலை, பள்ளம், ஆறு என்று காற்றினும் கடிய வேகத்தில் பயணித்துச் செல்லும் பாண்டுரங்க மூர்த்தியினை நெருங்கக் கூட இயலாமல் முகலாயப் படையின் பெரும் பகுதியினர் உடலும் உள்ளமும் தளர்ந்து மடிகின்றனர். எஞ்சியிருந்தோரும் புறமுதுகிட்டு மீண்டும் புதுதில்லிக்கே திரும்பி விடுகின்றனர். பாண்டுரங்க மூர்த்தி மீண்டும் ஆலயத்துள் எழுந்தருளித் துக்காராம் சுவாமிகளின் பாடல்களை மகிழ்வுடன் கேட்கத் துவங்குகின்றார்.
'சிவாஜி மன்னர் ஔரங்கசீப் படையினரை வென்று விட்டார்' எனும் செய்தி காட்டுத் தீ போல பரவி இறுதியாய் ஆலயத்திற்குள்ளும் வந்தடைகின்றது. நடந்தவை உணர்ந்து உள்ளம் உருகும் வீர சிவாஜி 'பாண்டுரங்கா! ஏ பிரபு! என்னே உன் கருணை!' என்று கண்ணீர் பெருக்கித் தொழுகின்றார். பின் துக்காராம் சுவாமிகளின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றார். சுவாமிகள் மிக மகிழ்ந்து, இந்து தர்ம மரபினை அன்னிய தேசத்தினரிடமிருந்துக் காக்க சிவாஜி மேற்கொண்டு வரும் அரியபெரிய பணிகளைச் சிறப்பித்துப் பின் நல்லாசியும் கூறுகின்றார்.

No comments:
Post a Comment