கோசலை மைந்தன் சிவவில்லினை வளைக்கும் அற்புதத் திருக்காட்சி (10 நிமிட ஒளிப்பதிவு):

எவரொருவராலும் சிவவில்லினை அசைக்கக் கூட இயலவில்லை, விஸ்வாமித்திரர் ஆணையினை ஏற்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வில்லினை நோக்கிச் செல்கின்றார், திருமுகத்தில் வில்லினை வளைப்பது குறித்த சலனமோ ஐயப்பாடுகளோ சிறிதுமற்ற புன்முறுவல். அன்னை சீதையின் உள்ளமோ பரிதவிக்கின்றது; அம்பிகையைத் தியானிக்கின்றது, அவையெங்கும் ஒரே நிசப்தம், நமை உய்விக்கத் தோன்றிய கோதண்ட இராமன் கணநேரத்தில் வில்லினையெடுத்து வளைத்து அன்னையின் மலர் மாலையை ஏற்று அருள் புரியும் ஆனந்தத் திருக்காட்சி ('எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்' என்பார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்).

No comments:

Post a Comment