கோசலை மைந்தன் சிவவில்லினை வளைக்கும் அற்புதத் திருக்காட்சி (10 நிமிட ஒளிப்பதிவு):

எவரொருவராலும் சிவவில்லினை அசைக்கக் கூட இயலவில்லை, விஸ்வாமித்திரர் ஆணையினை ஏற்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வில்லினை நோக்கிச் செல்கின்றார், திருமுகத்தில் வில்லினை வளைப்பது குறித்த சலனமோ ஐயப்பாடுகளோ சிறிதுமற்ற புன்முறுவல். அன்னை சீதையின் உள்ளமோ பரிதவிக்கின்றது; அம்பிகையைத் தியானிக்கின்றது, அவையெங்கும் ஒரே நிசப்தம், நமை உய்விக்கத் தோன்றிய கோதண்ட இராமன் கணநேரத்தில் வில்லினையெடுத்து வளைத்து அன்னையின் மலர் மாலையை ஏற்று அருள் புரியும் ஆனந்தத் திருக்காட்சி ('எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்' என்பார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்).

சூர்ப்பனகை மூக்கறுபட்ட நிகழ்வு (வால்மீகி இராமாயண வழியில் எடுக்கப் பெற்றுள்ள 7 நிமிடக் காணொளி):

முன்னமே திருமணமானவள் சூர்ப்பனகை இருப்பினும் ஸ்ரீராமரின் மேல் காமுறுகின்றாள், அது பயன் தராததால் அடுத்து இலட்சுமனனிடம் சென்று காதல் வசனம் பேசுகின்றாள், அதிலும் பயனில்லை என்றதும் அன்னை சீதையைக் கடும் கோபத்துடன் கொல்லச் செல்கின்றாள் அதனால் வேறு வழியின்றி இலட்சுமனனின் தண்டனைக்கு உள்ளாகின்றாள்.

வாலி வத நிகழ்வு (வாலியின் கேள்விகளும், இராமனின் விளக்கங்களும் - 9 1/2 நிமிடக் காணொளி):


ஸ்ரீராமர் இராமேஸ்வர மூர்த்தியை வணங்கும் திருக்காட்சி:

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இராமேஸ்வரத்தில் ஜோதிர்லிங்க சிவமூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து வழிபடும் அதி அற்புதத் திருக்காட்சி (2 நிமிடக் காணொளி):

கருடன் ஸ்ரீராம லக்ஷ்மணர்களைப் பீடித்திருந்த இந்திரஜித்தின் நாக பாசத்தினை நீக்கி உதவும் நெகிழ்வான காட்சித் தொகுப்பு (9 நிமிடக் காணொளி):


ஸ்ரீராமர் அயோத்தியை வணங்கும் திருக்காட்சி:

14 வருட வனவாசத்திற்குப் பிறகு அயோத்தி திரும்பும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பரம புண்ணியமான அயோத்தி மண்ணினை வணங்கும் நெகிழ்வான திருக்காட்சி (3 நிமிடக் காணொளி):