திருக்கடல்மல்லை (மாமல்லபுரத்தில் ஸ்தல சயனப் பெருமாள் தரிசனம்):
மாமல்லபுரத்தின் பிரதானப் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஷேத்திரம் திருக்கடல்மல்லை, 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுவது, பன்னிரு ஆழ்வார்களுள் பூதத்தாழ்வாரின் அவதாரத் தலம், விசாலமான திருக்கோயில் வளாகம். புண்டரீக முனிவருக்கு அருளும் பொருட்டு பாற்கடல் வாசனாரான ஸ்ரீமகாவிஷ்ணு இத்தலத்தில், நான்கு திருக்கரங்களோடு, ஆதிஷேஷனின்றி நிலத்தில் சயனத் திருக்கோலத்தில் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார், திருவடிகளுக்கு அருகில் புண்டரீக முனிவர் வணங்கிய நிலையிலுள்ளார். தாயாரும் தாமரைப் பீடத்தில் அல்லாது நிலத்திலேயே நிலமங்கைத் தாயாராக எழுந்தருளி இருக்கின்றாள். திருமங்கையாழ்வார்; பூதத்தாழ்வார் ஆகியோர் பாசுரங்களை அருளியுள்ளனர். அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment